“முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான காணிகள் (ஏக்கர்கள்) நிலம் ஓசை இன்றிச் சிங்கள மயமாக்கப்பட்டபடி உள்ளன. இவற்றைக் கேள்வி கேட்க வேண்டிய அலுவலர்கள் எட்டியும் பார்ப்பதில்லை. தடுக்க வேண்டிய அரசியலாளர்கள் உருப்படியாக ஏதும் நிறைவேற்றுவதில்லை” எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.   127 சிற்றூர்(கிராம)ச் சேவகர்கள் பிரிவினையும், 1,15,024 பேரையும் உள்ளடக்கிய 5 மண்டல(பிரதேச)ச் செயலாளர் பிரிவுகளைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டமானது 2614 சதுரப் புதுக்கல் (சதுரக் கிலோ மீற்றர்) பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் காணிகளுக்கும்(ஏக்கருக்கும்)   மேற்பட்ட நிலங்களை சிங்களம் விழுங்கி விட்டது.   இம்மாவட்டத்தின் தென் பகுதியில் இருந்து தமிழ் மக்களின்…