தமிழர் மெய்யுணர்வுக்கொள்கை (தொடர்ச்சி)-சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 18 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 19 9. மெய்யுணர்வுக் கொள்கை (தொடர்ச்சி) “பொருள்நிலை சீருறின் உலகப் பொல்லாங்கு எல்லாம் ஒழியும்” எனும் பொருளுரையைப் போற்றாதார் தம்மைப் போற்றாதாரே. எனவே, இதனை நன்கு வற்புறுத்தினர் சங்க காலப் பெரியோர்கள். “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினைக் கைம்மிக எண்ணுதி” (குறுந்தொகை-63) “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுநர் இருந்தோர்க்கு அரும்புணர்வு இல்” (நற்றிணை-214) என உழைத்துப் பொருளீட்டாதார்க்கு…