ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!

ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!   ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.)  மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு  

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்    இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர். – பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)

ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ

ஆரியர் இயல்பு – பேராசிரியர் மு.வ தம்மை உயர்வாகக் கருதிக் கொண்டு பிறரைத் தாழ்த்தும் மனப்பான்மை எல்லோரிடமும் உள்ளது. எனினும், ஆரியர்க்கு அது மிகுதி எனலாம். அவர்கள் சென்று தங்கிய இடங்களில் எல்லாம் அங்குள்ளவர்களோடு கலந்து பழகி அவர்களின் நாகரிகப் பழக்க வழக்கங்களையும் கலைகள் முதலியவற்றையும் தம்முடையனவாக ஆக்கிக் கொண்டு உயர்வெல்லாம் தமக்கே என்றும் அங்கு வாழ்வோர் அனைவரும் காட்டு மிராண்டிகள் என்றும் தூற்றும் இயல்பினராக விளங்கினர். ஆரிய திராவிட நாகரிகம்.   இன்று ஆரியம் என்று போற்றப்படுபவை எல்லாம் உண்மையாகவே ஆரியர்க்கு உரியவை…

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – (இ)லீ குவான் (இ)யூ

“பணிந்து போகத் தமிழன் என்ன நனைந்த கோழியா?” – சிங்கப்பூர் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ உணர்ச்சிப்பெருக்கம்!     “சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப்பயந்து ஓடி ஒழிந்து விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் சிங்களவர்கள், தமிழர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்” எனக் குறிப்பிட்டுள்ள சிங்கப்பூரின் முன்னாள் தலைமையர் (இ)லீ குவான் (இ)யூ, “தமிழர்களுக்குத்தனி நாடே தீர்வாகும்!” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்….