இலக்குவனார் பெயர் நிலைக்கும்! – இளவரச அமிழ்தன்
இலக்குவனார் பெயர் நிலைக்கும்! கமழ்கின்ற செம்மொழிக்குப் பணிகள் செய்து களம்கண்ட பல்லோரும் பிறந்த நாட்டில் தமிழேதன் மூச்சென்று முழங்கி நின்ற தன்மான இலக்குவனார் தோன்ற லானார் தமிழ்க்காப்புக் கழகங்கள் தழைக்கச் செய்து தரமான மொழியினையே தமிழர் ஆள தமிழுக்கு அடுத்ததென ஆங்கி லத்தை தமிழர்கள் கற்றிடவும் வழிவ குத்தார்! தொன்மையான நாகரிகம் பண்பா டென்று தூயதமிழ் இலக்கணந்தான் கொண்ட தாலும் முன்தோன்றி மூத்தமொழி; என்னும் போழ்தில் மூத்தகுடி நம்குடியே! பெருமை பூண்டோம்! முன்னேற்றங் கருதியேதான் ஆங்கி லத்தை முனைப்புடனே போற்றிடுஅவ் வேளை தன்னில்…