ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி
ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! மோதியுமிழ் என்றுரைத்த பாரதியின் பாட்டினையும், சாதியில்லை என்றுரைத்த பெரியாரின் கூற்றினையும், காதினிலே வாங்காமல் கண் மூடிக் கிடப்பதனால், நீதிநெறி தவறாத தலைவர்கள் இல்லாமல், நாதியற்று நெஞ்சுடைந்து நற்றமிழன் சாகின்றான்! போதிமர நீழல்கள் பொய்யாகிக் கருகியதால், தீதிலுயர் ஊழல்கள் தொய்வின்றிப் பரவியதால், சாதனைகள் செய்வதாகச் சத்தியங்கள் செய்து, சூதாட்டக் களமாகத் தேர்தலினை மாற்றி, வேதனையில் தமிழர்களை வீழவைத்துத் தூகிலேற்றி, பாதியுயிர் பறித்தெடுத்துக் குற்றுயிராய் நிற்கவைத்தார்! மீதியுயிர் போகும்முன் மனந்தெளிந்து எழுந்து, நூதனமாய்ச் சிந்தித்து நல்லவரைத் தேர்ந்து, சோதிநிறை நன்னிலமாய்…
இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ? – பாவேந்தர் பாரதிதாசன்
என் தமிழா? கட்டாயம் இந்திதனைக் கற்க அரசினர்கள் சட்டமியற்றுவதில் சம்மதமோ என்தமிழா! கன்னல் தமிழ்க்கல்வி கட்டாய மாக்காமல் இன்னல்தரும் இந்தியினை எண்ணுவதோ என்தமிழா! தாய்க்குச் சலுகையின்றித் தாழ்கின்றாள் இந்திஎனும் பேய்க்கு நறுநெய்பால் பெய்கஎன்றார் என்தமிழா? உறவிட்ட பார்ப்பனர்கள் இந்திஎன ஊளையிட்டும் பிறவிக் குணங்காட்டும் பெற்றியுணர் என்தமிழா! ‘தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர்’ — இதை நமைவிழுங்க வந்தவர்கள் நன்கறிவர் என்தமிழா! தம்மவர்கள் நன்மைக்கே தக்கதென்றால் இந்திதனை நம்மவர்கள் அன்னவர்கால் நக்குகின்றார் என்தமிழா! உடல்காக்கச் சோறில்லை என்னுங்கால் நம்பகைவர் கடல்காட்டி வீழ்என்று கத்துகின்றார் என்தமிழா! தென்றற்…
என்னடா தமிழா !- ஈரோடு இறைவன்
என்னடா தமிழா ! மூளை ஆங்கிலத்தில் கிடக்குது ! நாக்கு ஆங்கிலத்தில் கிடக்குது ! உன் எழுத்து ஆங்கிலத்தில் கிடக்குது ! என்னடா தமிழா உன் தமிழ் எங்கே கிடக்குது ! – ஈரோடு இறைவன்