அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இசைக் கருவிகள்
அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மறைந்து போன சில இசைக் கருவிகள் இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும் பிறவும் தேவவிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாயுள்ள தொன்னூல்களுமிறந்தன. பின்னும் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசாரார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடுஇறுதிகாணாமையின், அவையும் இறந்தனபோலும், இறக்கவே வரும் பெருங்கலமுதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும்பெற்று ஆயிரங்கோல், தொடுத்தியல்வது; என்ன? ஆயிரநரம்பிற்றாதியாழாகு, மேனையுறுப்புமொப்பன கொளலே, பத்தர…