தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! – புலவர் பழ.தமிழாளன்
தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும்! இதழ்களுக்கு வேண்டும் ! 1.நாடாம்நம் மொழியினமே போற்றல் வேண்டும் !நற்றமிழர் பண்பாடு காத்தல் வேண்டும் !வாடாமல் உணவுண்டே மக்கள் வாழவழிவகைகள் ஆசான்போல் கூறல் வேண்டும் !நாடாளும் மன்னனிடம் குறையே கண்டால்நக்கீரன் போலுறுதி கூறல் வேண்டும் !ஏடாள்வோன் என்றென்றும் நெருப்பைக் கக்கும்எரிமலையாய்த் தீமைதனை எரித்தல் வேண்டும் ! 2.மனமொன்றித் தமிழினத்து மக்கள் எல்லாம்மாற்றமின்றித் தமிழறத்தைப் போற்றல் வேண்டும் !இனம்நாடு மொழிவாழ்ந்து சிறப்புற் றோங்கஎந்நாளும் ஏற்றபணி செய்தல் வேண்டும் !தனதுநல வாழ்வதனைப் புறத்தே தள்ளித்தமிழினத்து நலவாழ்வை எண்ணல் வேண்டும் !இனப்பகையாம் ஆரியத்தை…