தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக அரசிற்குப் பாராட்டும் சீராட்டும் தமிழ்நாட்டில் – மாமல்லபுரத்தில் – 44 ஆவது சதுரங்க ஞாலப்போட்டியை அரசு சிறப்பாக நிகழ்த்தி இன்று(09/08/22) நிறைவு விழாவும் நிகழ்கிறது. போட்டியில் வாகை சூடிய அனைவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற பிற போட்டியாளர்களுக்கு அடுத்து வெற்றியைச் சுவைக்க வாழ்த்துகள். சிறப்பாக நடத்திய தமிழக அரசிற்கும் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு முதல்வர் மு.க.தாலினுக்கும் பாராட்டுகள்.   ஆடி 12, 2053 / 28.07.2022  முதல் நடைபெறும் சதுரங்க விழாவிற்கு வந்துள்ள 186 நாடுகளிலிருந்து  பங்கேற்ற 1,736 பன்னாட்டு வீரர்களும் வீராங்கனைகளும்…

நரைமுடிக்குக் காரணம் ஆண்ட நம் மக்கள் அடிமைகளானமை! – சி.இலக்குவனார்

யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்; தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால் தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்; ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச் சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும் அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்; உயர்கல் விக்குறு ஊடக…