“தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார்” நூலை இரு நாள் இலவயமாகத் தரவிறக்கம் செய்யலாம்.
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 – மறைமலை இலக்குவனார்
(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றது, அரசு இலச்சினையில் விளங்கும் ‘சத்ய மேவ சயதே’ என்னும் இந்தித்தொடரை உடனே அகற்றி “வாய்மையே வெல்லும்” என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியவர் இலக்குவனாரே. சத்தியம் என்பதனை உண்மை என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர். ஆனால் மூதறிஞர் இராசாசி ‘வாய்மை’என்பதே பொருந்தும் எனக் கூறினார். தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்று விட்டதால் உடனே அனைத்துக் கல்விநிறுவனங்களிலும் தமிழையே பயிற்சிமொழியாக ஆக்கவேண்டும் என இலக்குவனார் வலியுறுத்திய…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்
(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது. 1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார்…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 – மறைமலை இலக்குவனார்
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 இயல்பாகத் தமிழுக்கு முதன்மையும் பெருமையும் வழங்கிப் போற்றிவந்த தமிழர் வேற்றவர் மொழியும் பண்பாடும் அறிமுகமான பொழுதில் தமிழின் தனித்தன்மையும் மேலாண்மையும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என எழுச்சியுடன் இயங்கிய செயல்முறையே தமிழியக்கம் என வரையறை அளிக்கலாமல்லவா? சமணர் நுழைவும் அர்த்தமாகதி, சௌரசேனி முதலான பிராகிருதங்களின் அறிமுகமும் ஏற்பட்டவேளையில் வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என்று விதி வகுத்த தொல்காப்பியரே முதல் தமிழியக்கப் போராளி. சமற்கிருதத்தின் தோற்றத்திற்கு முன்னமேயே வகுக்கப்பெற்ற இந்த விதி பின்னாளில் சமற்கிருதம் தமிழருக்கு…