தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை! திருந்தவும் இல்லை! ‘’யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’, ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான…