தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள்: இதழரங்கம்
தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் தமிழுக்கு வளம் சேர்த்த ஐரோப்பியத் தமிழறிஞர்கள் இதழரங்கம் சமயம் பரப்ப வந்தாலும் தமிழைப் பரப்பியவர்கள் ஐரோப்பியத் தமிழறிஞர்கள். தமிழுக்கு வளம் சேர்த்த அவர்களின் தொண்டு அளவிடற்கரியது. நிறைகுறைகளைக் காய்தல் உவத்தலின்றி ஆராயாமல் அறிஞர் பெருமக்களைக் குறைகூறுவோர் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் முதலாகப் பலரும் உள்ளனர். எனவே ஐரோப்பியத் தமிழறிஞர்கள் குறித்த இதழ்வழிக் கருத்தரங்கத்தைத் தமிழ்க்காப்புக் கழகம் நடத்துகிறது. ஐரோப்பியத் தமிழறிஞர் ஒருவரைப்பற்றியோ சிலரைப்பற்றியோ பலரைப்பற்றியோ அனைவரைப்பற்றியோ கட்டுரைகள் அனுப்பலாம். ஒருவரே வெவ்வேறு அறிஞர்கள் குறித்த…