தமிழே வாழ்க!  – தாராபாரதி தமிழே வாழ்க! தாய்மொழி தமிழே! எந்தன் தனிமொழி முதலே, வாழ்க! வாய்மொழி பலவென் றாலும் வழிமொழி நீயே ஆனாய்! காய்மொழி சிலவற் றுள்ளும் கனிமொழி நீதான் என்பேன்! தாய்மொழி தமிழே, எந்தன் தனிமொழி முதலே வாழ்க!   கவிஞர் தாராபாரதி