தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்!     தமிழ் ஆர்வத்தின் காரணமாகப் பலர் தமிழ் அமைப்புகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நிகழ்ச்சிகள் நடத்துவதில் மனநிறைவு கொள்வோரும் தற்பெருமை அடைவோரும் உண்டு. ஆனால், உண்மையில் அவர்கள்,  தமிழைத் தொலைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை உணரவில்லை.   தமிழன்பர்கள் எனில், பிற மொழிக்கலப்பை அகற்ற வேண்டுமல்லவா? பிறமொழி எழுத்துகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றைக்குத் தமிழ் விழாக்கள் நடத்துவோரில் மிகப் பெரும்பான்மையர்,  பெயர்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; தலைப்பெழுத்துகளில் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்;  நிகழ்விடம், பணியிடம், முகவரிகள் முதலானவற்றைக்…