தமிழ் உரிமை காக்க இலக்குவனார் வேண்டுகோள்!
தமிழ் உரிமை காக்கப் பெருநடைப் பயணம் மேற்கொள்வது குறித்த இலக்குவனார் வேண்டுகோள்! கல்வித்துறையிலும் ஆட்சி, நீதி, கலைத் துறைகளிலும் தமிழ்உரிமையை நிலைநாட்டும் நல்லநோக்கத்துடன், அண்மையில் தமிழ் உரிமைப் பெருநடைச் செலவொன்றை மேற்கொள்ள இருக்கின்றோம். கல்லூரிகளில் உடனே தமிழைப் பாட மொழியாக ஆக்கவேண்டியதின் இன்றியமை யாமையை மக்களிடையே விளக்க வேண்டும். பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்க ளிடையே தமிழ்மூலம் படிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் பிறமொழிகள்மூலம் படிப்ப தனால் ஏற்படும் தீமைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும். தமிழைப் பாடமொழியாகக் கொண்டு படிக்க வருவோர் தொகையை மிகுதிப்படுத்த வேண்டும். உயர்நிலைப்…