தமிழ்நாடு – கவிஞர் தமிழ்ஒளி
தமிழ்நாடு புதுமை கண்டு வாழ இன்று போர் செயுந் தமிழ்நாடு – மறப் போர் செயுந் தமிழ்நாடு – மிக முதுமை கொண்ட பழமை வீழ மோதிடும் தமிழ்நாடு – வீழ மோதிடும் தமிழ்நாடு! திசையை, விண்ணை, வென்று நின்று சிரித்திடுந் தமிழ்நாடு – எழில் சிரித்திடுந் தமிழ்நாடு – கொடி அசைய உயர மண்ணில் நிற்கும் கோபுரம் தமிழ்நாடு – கலைக் கோபுரம் தமிழ்நாடு! காவிரிநதி பாயுங் கழனிக் கண்ணொளி பெறும்நாடு – முக் கண்ணொளி பெறும்நாடு – பொழில் பூவிரிநறும் புனல்வி…