சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா & உலகத் தமிழ் நாள்

தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு–புதுவை   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா உலகத் தமிழ் நாள்   ஐப்பசி 28, 2052 / ஞாயிறு / 14.11.2021 காலை 10.00 / இணையக் கூட்டம் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)   தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்   கவிவாழ்த்து: பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்…

ஆய்வுக்கு ஓய்வு! இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!

ஆய்வுக்கு ஓய்வு!  இளங்குமரன் ஐயா நம்மை விட்டுப் பிரிந்தார்!   உண்ணச் சிறிது போதும்! உறங்கப் படுக்கைத் தேடேன்! எண்ணப் பொழுது வேண்டும்! எழுத உரிமை வேண்டும்! என்பதை முழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஆய்வறிஞர், தமிழ்க்கடல், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் இன்று(ஆடி 09, 2052 / 25.07.2021) இரவு 7.45 மணிக்குத் திருநகரில் அவரது இல்லத்தில் மறைந்தார். பள்ளி ஆசிரியர், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் எனப் பல்வேறு நிலைகளில் வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் பயணத்தைக்…

தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ – உரையரங்கம்

சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை    மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக்  கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி,  தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை   முதலான பல அமைப்புகளுடன் இணைந்து  நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர்  மழலையர்  – தொடக்கப்பள்ளி மழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார்.   த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார்.    இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார்.  முனைவர் க.ப. அறவாணன்…

தமிழ்ப்பள்ளிகளை மூடாதே! – உரையரங்கம், சென்னை

எண்என்ப   ஏனை   எழுத்துஎன்ப   இவ்விரண்டும் கண்என்ப   வாழும்   உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 392) தமிழ்ப்பள்ளிகளை          மூடாதே! உரையரங்கம் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 தே.ப.ச. (இக்சா) மையம் (கு/ஊ), (அருங்காட்சியகம் எதிர்ப்புறம்), எழும்பூர், சென்னை 600  008 தமிழ்த்தாய் வாழ்த்து: திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி வரவேற்புரை  :         த.தமிழ்த்தென்றல் தலைமை      :               இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரை:      முனைவர் க.ப. அறவாணன் கருத்துரை   : தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் கல்வியாளர் முனைவர் இ.மதியழகி எழுத்தாளர் மாம்பலம் ஆ,சந்திரசேகர் கல்வியாளர்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா)    பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து, இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்றார் முத்தமிழ்க்காலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங)   இவ்வாறு சென்னையில் வேலைவாய்ப்பு முயற்சிகளினால் அலைந்து கொண்டிருந்த பேராசிரியர், கலைத்தந்தை கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் தம்மைச் சந்திக்க விரும்புவதாக அறிந்து மதுரை சென்றார்; தமிழ்ப் புலமையும் தமிழ்உணர்வும் மிக்க கலைத்தந்தை பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராக நியமித்தார். அப்பொழுது முதல்வர் பணியிடமும் ஒழிவாகத்தான் இருந்தது.  அதற்கு ஆங்கிலத்துறையைச் சேர்ந்த திரு. வரதாச்சாரி என்பவரை நியமித்தார். துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றி உள்ள தகுதி மிக்கப் பேராசிரியரையே அவர் முதல்வராக அமர்த்தி…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] –  தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி)   “போக்குவரத்து வசதி குறைந்திருந்த அந்நாட்களில் படிப்பறிவுற்றோர் குறைந்திருந்த மன்பதைச் சூழலில் கல்லூரிப் பணியாற்றியதே போதும் என நிறைவடைந்துவிடாமல் ஊர் ஊராகச் சென்று சங்க இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு தன்னிகரற்றது. சொற்பொழிவாற்றினார் எனக் கூறுவதைக் காட்டிலும் தமிழ்மொழி, தமிழின மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார் என்றே கூறவேண்டும்.” (பேராசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் மொழிப்போர் தந்தை – ஓர் ஆய்வு :  பக்கம்23-24)   …