என்று தமிழ்..? – புதுவைத் தமிழ்நெஞ்சன்
இந்தியினை எதிர்க்கின்றோம் அறுபதாண்டாய் என்கின்றீர் ஏற்றமென்ன தமிழுக்குச் செய்துவிட்டீர்? வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும் வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர்? எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் படிக்கின்றீர் எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர் செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச் செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும் எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும் எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர்? எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ் எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர்! கதிரொளியால் மறைந்தோடும் காலைப்பனி போலயிங்குக் கனித்தமிழில் கற்றாலே கசப்பு மாறும் கதிர்மணியை நிலமேற்கும்…