தமிழ்க்குடிலின் கவிதைப் போட்டி
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கு பெறுக! பரிசு வெல்லும் வாய்ப்பினை பெறுக! அன்புத் தோழமைகளுக்கு, ‘தமிழ்க்குடில்’ பொறுப்பாளர்களின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் “மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். கவிதைப் போட்டி விதிமுறைகள்: தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம். கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது எனக் குறிப்பிடவும். ( எ.கா.)…
தமிழ்க்குடில் நடத்தும் தமிழர் விளையாட்டு விழா
அன்புடைய பெருந்தகையீர்…! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2044 முதல் பொங்கல் விழாவினையொட்டி தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தமிழரின் பரம்பரை விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர் விளையாட்டுப் போட்டிகளாக நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் முயற்சியாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் என்னும் சிற்றூரில் நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற மாவட்டங்களிலும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். நடத்தபடும் விளையாட்டுப் போட்டிகள்: 1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 3. அறிவுசார்ந்த…