திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2  திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல்-தனிப்பாடல் : காளமேகம்

பங்குனி 23, 2047 / ஏப்பிரல் 05, 2016 மாலை 6.30,  சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய  வேண்டுகின்றோம். சென்னைக் கம்பன் கழக மாத நிகழ்வு ; வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.     என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதீய வித்யாபவன்

எங்கள் பெரியார் – கவிமதி

எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார் மூடிமறைத்துப் பேச அறியார் மூடப் பழக்கம் எதுவும் தெரியார் நூலார் திமிர் அறுத்த வாளார் நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார் நரியார் தோலுரித்த புலியார் நால்வகை வருணம் கலைத்த கரியார் எளிதாய்க் கடந்து செல்லும் வழியார் ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார் தெளியார் அறிவு நெய்த தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான குறியார் உலகத் தமிழருக்கு உரியார் உணர்ந்தால் விளங்கும் மொழியார் மனு வேதம் கொளுத்திய திரியார் மாதருக்குத் தெளிவான ஒலியார் தேடிப் படிக்க சிறந்த…