மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்!
மேனாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்! மேனாள் அமைச்சரும் அமமுக அமைப்புச் செயலாளருமான பரிதி இளம்வழுதி இன்று நலக்குறைவால் காலமானார். தி.மு.க.வில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் செயலாகவும் மேலவை உறுப்பினராகவும் இருந்த இளம் வழுதியின் மகன்தான் பரிதி(இளம்வழுதி). அறிவுக்கொடி என்னும் இதழின் வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் சிறிது காலம் இதழ்ப்பணியிலும் ஈடுபட்டார். இவரது சொல் வன்மையும் நாநயமும் இவரைத் தி.மு.க.வின் சிறப்புப் பேச்சாளர்களுள் ஒருவராக மாற்றியது. மக்களைச் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்க மட்டுமல்லாமல் உருக்கத்தில் மூழ்கும் வண்ணமும் பேசும் திறன் மிக்கவர். தன் 25 ஆம்…