அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 6 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1) 2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி மும்முரமாகத் தொடங்கியது. இயேன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது. ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன். சிக்கல் − 1 பாதிரியாரின் 16-ஆம்…
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கிய முதல் கையேடு – 4 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 4 (மொழிபெயர்ப்பு முயற்சி-1) இயீன் ஃகைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கப் பெண்மணி, பங்குனி 04, தி.ஆ. 1950 / 1919-ஆம் ஆண்டு மார்ச்சு 17-ஆம் நாள் பிறந்தவர். மிக நல்ல முற்போக்கு எண்ணம் கொண்டவர். வியத்துனாம் போர்க்காலத்தில் எளியவர்கள் சார்பில் போராடியவர். கல்லூரியில் இளங்கலைப் படிப்பு முடித்தார்; பிறகு இல்வாழ்க்கை. இந்தியாவில் கிறித்தவ சமயம் பரவியது எப்படி என்று தெரிந்துகொள்ளும்…
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 3 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 8, 2045 / மார்ச்சு 22, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 3 (இலக்கணத்தின் அமைப்பு) “கையேட்டின் அமைப்பு” போர்த்துக்கீசியப் பாதிரியார் அன்றீக்கு அடிகளார் “மலபார் மொழிக் கருவி /Arte Da Lingua Malabar” என்ற நூலைக் கையால் எழுதினார் என்று தெரிகிறது. கையேட்டில் சில இடங்களில் இரண்டு வகைக் கையெழுத்து இருப்பது தெரிகிறது. இந்தக் கையேட்டை உருவாக்க இதை மேலும் ஆராய்ந்தால் இதைப் பற்றிய விளக்கம் கிடைக்கலாம். நிற்க. பாதிரியாரின் கடமை: முத்துக்குளித்துறையில்…
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 2 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 2 (பின்னணி) நினைத்துப் பாருங்கள்! உங்கள் நாட்டில், உள்ளூரில் அரசியல் குழப்பம்; அமைதியில்லை. உங்கள் தொழிலுக்குக் கேடு. உங்கள் குடும்பத்துக்குக் கேடு. அந்த நேரத்தில் கப்பலில்/தோணியில் வந்து இறங்குகிறார்கள் சில அயலவர். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனித உருவம் என்பதைத் தவிர ஒற்றுமை என்பது மிகவும் குறைவு; உருவத்தில், நிறத்தில், பார்க்கும் முறையில், உடல் அசைவில், … பல வேற்றுமை….
அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 1 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்
தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 1 முதலில் இந்தத் தலைப்பைப் பற்றி … ஆம் … பிற நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார், குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்தவர்கள், தம் சமயத்தைப் பரப்புவதற்காக நம் மொழிகளைப் படித்து அந்த மொழிகளை விளக்க எழுதிய “இலக்கணம்” அனைத்துமே “கையேடு”களே. 20~21-ஆம் நூற்றாண்டுப் பல்கலைக்கழகத்து ஆய்வாளர்களைப்போல மொழி ஆராய்ச்சி செய்வதற்காக அந்த இலக்கணங்களைப் பாதிரிமார் எழுதவில்லை. தங்களை ஒத்த பாதிரிமாருக்கு உதவும் வகையில் தாங்கள் படித்து அறிந்த மொழிகளை விளக்கியிருக்கிறார்கள், அவ்வளவே. இந்தக் கையேடுகள்/இலக்கணங்கள்…