தமிழ்க் கவிதை – கவிஞர் க.பெருமாள்
தமிழ்க் கவிதை எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்எழுத்தசையும் சீர்த்தளையும் தேடி சோர்ந்தபதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோடமெது மெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடமமெய்மறந்தேன் அதன் சுவையில் ஒன்றிப் போனேன்!இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாடயான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி! வாழ்வுமெங்கள் வளமுஉயர் தமிழே என்றவழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்கஅருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாயசூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்சுடர்ந்திருக்கும் உண்மையதை மறுப்பாருண்டோ!யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்! துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்குமதொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்நிறைவான…