தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! – தமிழ் சிவா
தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! சிறிய வீட்டின் சிதைந்த தூண்பற்றி உன்மகன் எங்கே என்று கேட்பவனே! என்மகன் எங்கிருப் பானென்று அறிவேன். நீங்கள் நீக்கமறத் திறந்து வைத்த சாய்க்கடை மதுவின் முன்பே வீழ்ந்து வாய்க்கடை எச்சில் வடியக் கிடப்பான். வௌவால் தங்கிய குகையாய், அய்யோ ஈன்ற வயிறோ இதுவே, அடேய்! மீண்டும் மீண்டும் வேண்டி யழைத்துக் கும்பிடு போட்டுத் தூக்கி வந்து கையில் புட்டியும் கறிச்சோறும் தந்தால் தோன்றுவான் தேர்தல் களத்தில் வீணே! திணை – வாகை, துறை – ஆள்பிடித்தல் /…
தமிழண்ணலின் தமிழ் வாழ்வு – தமிழ்ச்சிவா
தமிழண்ணலின் தமிழ் வாழ்வு (ஆடி 28, 1956 – மார்கழி 13, 2046 / ஆக. 12, 1928 – திசம்பர் 29, 2015) எண்பத்தெட்டாம் அகவைவரை வாழ்ந்து தமிழ் மொழிக்குத் தன்னாலான பல ஆய்வு நூல்களை வழங்கித், தமிழர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார், அறிஞர் இராம.பெரியகருப்பன் என்கின்ற தமிழண்ணல். ஆய்வுலகில் ஓர் தமிழரிமாவாகத் திகழ்ந்தார். கவிஞர், புதின ஆசிரியர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல முகங்களைக் கொண்டிருந்தவர்; தம்முடைய திறமையால் பல படிநிலைகளைக் கடந்தவர்; மொழிப்போர் வீரர்;…