உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (1) – இலக்குவனார் திருவள்ளுவன்
உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்! (1) திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள் 644) நாம் உணவுதரும் நிலையத்தை உணவகம் என்கிறோம். தங்குமிடத்தை விடுதி என்கிறோம். உணவுவசதியுடன் தங்குமிடத்தை உண்டிஉறையுளகம் (Boarding and Lodging) என்று முன்பு குறித்தாலும் இப்பொழுது உணவு விடுதி என்கிறோம். என்றாலும் விடுதி (Lodge) என்ற சொல்லை மாணவர்கள் அல்லது பணியாற்றுநர் தங்குமிடமாக(Hostel) நாம் கையாள்கிறோம். தங்குமிடம் என்ற சொல்லில் கையாண்டால், வேறுவகை தொழில் நடக்குமிடமாகக் கருதிப் புறக்கணிக்கி்றோம்….