மொழிக்கெலாம் தலைமை தமிழே – புலவர் குழந்தை
மொழிக்கெலாம் தலைமை தமிழே! முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் – புலவர் குழந்தை
தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்
தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்
மொழித் தொண்டர்கள்: சீத்தலைச் சாத்தனார் – -புலவர்மணி இரா. இளங்குமரன்
இறைவன் அடியார்களுள் வன்தொண்டர் உளர்; மென் தொண்டரும் உளர். வன் தொண்டர் எனப் பெயர் பெற்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அவர் வன் தொண்டருக்குச் சான்றானார்! மணிவாசகரும் இராமலிங்கரும் மென்தொண்டருக்குச் சான்றாளர்கள். மொழித் தொண்டர்களினும் இவ்வாறு வன் தொண்டரும் உளர்; மென் தொண்டரும் உளர். மொழிப் பிழை செய்தாரைத் தலையில் குட்டிய பிள்ளைப் பாண்டியனும் காதைக் குடைந்து, அறுத்த வில்லியும்வன் தொண்டர்கள். சாத்தனாரோ மென் தொண்டர். மொழிக்குறை செய்தாரின் நிலைக்கு இரங்கி நொந்து தம் தலையில் எழுத்தாணியால் இடித்துக் கொண்டார் அல்லவா! கெய்சர்…
தனித்தமிழ் பேசுவோம்!
தாய்த்தமிழ் காத்துயர்வோம்! மக்களால் பேசப்படும் மொழியே வாழும்! நம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும், குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம் மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக் காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின். இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக்…
பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி
இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம் மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம் நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள் நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள் உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே, உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே. – பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்
நெஞ்சு பதைக்கும் நிலை
கரும்புதந்த தீஞ்சாறே, கனிதந்த நறுஞ்சுளையே, கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே அணிதந்த செந்தமிழே அன்பே, கட்டி இரும்புதந்த நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலை ஈட ழித்து வரும்புதுமை நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சொல்ல வாய்ப தைக்கும். எடுத்துமகிழ் இளங்குழந்தாய், இசைத்துமகிழ் நல்யாழே, இங்குள் ளோர்வாய் மடுத்துமகிழ் நறுந்தேனே, வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே, வன்பு தொடுத்துமகிழ் நெஞ்சுடையார் துறைதோறும் நின்னெழிலைத் தோன்றா வண்ணம் தடுத்துவரல் நினைக்கையிலே நெஞ்சுபதைக் கும்சாற்ற வாய்ப தைக்கும். பண்டுவந்த செழும்பொருளே பார்அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள் கண்டுவந்த திருவிளக்கே, களிப்பருளும் செந்தமிழே, அன்பே வாழ்வில்…
தமிழ்த்தாயே! – முனைவர் மறைமலை இலக்குவனார்
உன்னை நாள்தோறும் மூச்சுத் திணற வைக்கிறார்கள் இந்த அச்சு அடிப்பாளர்களும் பத்திரிகைக் காரர்களும்! எலும்பில்லாத தங்கள் நாக்கையே ஆயுதமாய்க் கொண்டு உன்னை நாள்தோறும் கொலை செய்யப் பார்க்கிறார்கள் ஊடகத் தொகுப்பாளர்கள்! உன்னைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சித்திரைவதைச் செய்வதிலேயே இன்பம் அடைகிறார்கள் திரைப்பட நடிக நடிகையரும் பின்னணிப் பாடகர்களும்! உன்னை நாள்தோறும் ஊமைக்காயப் படுத்துகிறார்கள் பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும்! பல்கலைக் கழகப் பேர்வழிகளோ உன்னை மானபங்கப் படுத்த முயற்சி செய்கிறார்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்! தமிழ்த்தாயே! இத்துணை இன்னல்களுக்குப் பிறகும் இன்னும் …….