தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்

தாயினுஞ் சிறந்தது தமிழே! எமுனாகல்யாணி – ஆதி தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே. பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே…

அடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்! – கவிஞர் அம்பாளடியாள்

அடையா ளத்தை  இழப்பதற்கா பாடுபட்டோம்!   என்னுயிரே! பொன்மொழியே! உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும் ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க இக்கணமே நீவருவாய் என்றன் நாவில் இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும்! எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே! தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன்! நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன்! திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம் திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது பைந்தமிழே…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் [ங]  1.முன்னுரை  – முற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி   தேவை உறுநருக்கு உதவுவதும் கடமை தவறுநர்க்கு இடித்துரைப்பதும் போராளியின் கடமைதானே. மாணாக்கர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் அவர் பரப்பிய தமிழுணர்வு தமிழ் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பரப்புரைகளில் இலக்கியச் சிறப்புகளுடன் தமிழுக்கு ஏற்பட்டுள்ள தீங்கையும் காக்கும் கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உள்ளதையும் விளக்கினார் பேராசிரியர். “தமிழ், தமிழினம், தமிழிலக்கியம் இவற்றில் ஒன்றுபோம் எனில் மற்றவும் ஒழியும்.” (பாவேந்தர் பாரதிதாசன்) என்பதையே எல்லா இடங்களிலும் தொடக்கம் முதலே வலியுறுத்தினார்…

அருந்தமிழ் நுகர்ந்து மகிழ்வோமே! – கவிமணி

வள்ளுவர் தந்த திருமறையைத் – தமிழ்      மாதின் இனிய உயிர் நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவமே – என்றும்      உத்தம ராகி ஒழுகுவமே. பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து – கம்பன்      பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை நாவின் இனிக்கப் பருகுவமே – நூலின்      நன்னயம் முற்றுந் தெளிகுவமே, தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை      தேரும் சிலப்பதி காரமதை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்      ஓதி யுணர்ந்தின் புறுவோமே. கற்றவர் மெச்சும் கலித்தொகையாம் – இன்பக்…

தமிழ்த்திரு வாழ்க – கவியோகி

தமிழ்த்திரு வாழ்க “திருகொலு விருக்கும் தமிழ்த் திருவாழ்க! அரனருட் புதல்வி, அருங்கலைச் செல்வி வரனருள் முதல்வி; வாழிய தமிழ்த்தாய் அறிவனல் விழியாள், அமுதக் கதிர்விரி முழுமதி முகத்தாள், மோகன காந்தம் வீசிடும் அரசி மின்னெனத் தெறிக்கும் பொலிநகை முத்தம் பொழிந்திடும் வாயாள்” – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

தமிழ் முழக்கம்! – சுத்தானந்த பாரதியார்

“வைய மெங்கும் தமிழ் முழக்கம் செய்ய வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள் கைகள் செந்தமிழாலயம் கட்டிடக் காணுங்கள் வெற்றி பூணுங்கள் தேனினும் இனிய தெய்வத் தமிழிசை நலம் கூறுவோம் நானிலத்தினில் தாயின் மணிக்கொடி நாட்டுவோம் வீரம் காட்டுவோம்”   . கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

தமிழகம் உலகத் தாயகமாகுக! – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழ் இனிதோங்குக! தமிழ் உலகாளுக! தமிழிசை முரசம் தாவி விண்ணெழுகவே! தமிழ்மொழி உலகத்தாய் மொழியாகுக! தமிழகம் உலகத் தாயகமாகுக!   – கவியோகி சுத்தானந்த பாரதியார்  

மொழிக்கெலாம் தலைமை தமிழே – புலவர் குழந்தை

மொழிக்கெலாம் தலைமை தமிழே! முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ் உலகம் ஊமையா உள்ள அக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம் தலைமையாம் தமிழ் – புலவர் குழந்தை

தமிழும் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

தமிழும் நீடு வாழ்க காதொளிரும் குண்டலமும் கைக்குவளை                 யாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்                 மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடிசூ                 ளாமணியும் பொலியச் சூடி நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்                 தாங்குதமிழ் நீடு வாழ்க – கவியோகி சுத்தானந்த பாரதியார்

மொழித் தொண்டர்கள்: சீத்தலைச் சாத்தனார் – -புலவர்மணி இரா. இளங்குமரன்

  இறைவன் அடியார்களுள் வன்தொண்டர் உளர்; மென் தொண்டரும் உளர். வன் தொண்டர் எனப் பெயர் பெற்றார் சுந்தர மூர்த்தி நாயனார். அவர் வன் தொண்டருக்குச் சான்றானார்! மணிவாசகரும் இராமலிங்கரும் மென்தொண்டருக்குச் சான்றாளர்கள். மொழித் தொண்டர்களினும் இவ்வாறு வன் தொண்டரும் உளர்; மென் தொண்டரும் உளர். மொழிப் பிழை செய்தாரைத் தலையில் குட்டிய பிள்ளைப் பாண்டியனும் காதைக் குடைந்து, அறுத்த வில்லியும்வன் தொண்டர்கள். சாத்தனாரோ மென் தொண்டர். மொழிக்குறை செய்தாரின் நிலைக்கு இரங்கி நொந்து தம் தலையில் எழுத்தாணியால் இடித்துக் கொண்டார் அல்லவா! கெய்சர்…

தனித்தமிழ் பேசுவோம்!

தாய்த்தமிழ் காத்துயர்வோம்! மக்களால் பேசப்படும் மொழியே வாழும்! நம் தாய் மொழியாகிய தமிழ் தமிழர்களாகிய நம்மில் அறுதிப் பெரும்பான்மையினரால் பிழையாகவும், பிற மொழிக் கலப்புடனும், குறிப்பாக ஆங்கிலக் கலப்புடனும் பேசப்பட்டு வருகின்றது. இதனால், நம் மொழிச் சொற்கள் மறையத் தொடங்கி விட்டன. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் சொற்களாகப் பாவித்துப் பேசி வருகின்றனர் நம் தமிழர்கள். எடுத்துக் காட்டுகள் – காஃபி, டீ, ப்ரஷ், பேஸ்ப், சோப், டவல், டிஃபன், லஞ்ச், ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ், ஆட்டோ, பஸ், ட்ரெயின். இவ்வாறு ஆங்கிலச் சொற்களையே பேசிக்…

பைந்தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளியெழுச்சி

இன்றெமை ஆட்கொளும் எந்தமிழ்ச் செல்வி                 எந்தமிழ்க் கன்னியே எம்முயிர்த் தேவி மன்னிடும் உயிருடல் மாண்பொருள் எல்லாம்                 மகிழ்வுடன் நின்பதம் வைத்துமே நிற்பம் நின்னரு வரவினை நினைத்துமே இந்நாள்                 நிற்கிறார் நந்தமிழ் அரசியல் மக்கள் உன்னரு நெடும்புகழ் உற்றிடு மாதே,                 உவப்புடன் பள்ளியெ ழுந்தரு ளாயே. – பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார்