தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? எல்லா விழா அழைப்பிதழ்களிலும் பிறமொழிக் கலப்பும் பிறமொழிஒலிக்கான அயல் எழுத்துகளும் கலந்து கிடக்கின்றன. தமிழ் அமைப்பினர், தமிழ்த்துறையினர் நடத்தும் விழாக்களின் அழைப்பிதழ்களாவது (நல்ல)தமிழில் அமைய வேண்டாவா? இல்லையே! தமிழ் ஆண்டையும் குறிப்பிடுவதில்லை. முதலெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் பெயர்களைக் குறிப்பதில்லை. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களும் கிரந்தஎழுத்துகளின் கலப்பால் தமிழ், தான் பேசப்படும் பரப்பை இழந்துள்ளதையும் இழந்து வருவதையும் உணராமல் கிரந்தம் தேவை என்கின்றனர். அவ்வாறிருக்கும்பொழுது ஆர்வத்தால் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம்…
தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் அமைப்பினரே! தமிழ்த்துறையினரே! தமிழைத்தொலைக்காதீர்! தமிழ் ஆர்வத்தின் காரணமாகப் பலர் தமிழ் அமைப்புகள் நடத்தி வருகின்றனர். தமிழ்நிகழ்ச்சிகள் நடத்துவதில் மனநிறைவு கொள்வோரும் தற்பெருமை அடைவோரும் உண்டு. ஆனால், உண்மையில் அவர்கள், தமிழைத் தொலைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை உணரவில்லை. தமிழன்பர்கள் எனில், பிற மொழிக்கலப்பை அகற்ற வேண்டுமல்லவா? பிறமொழி எழுத்துகளின் பயன்பாட்டை நீக்க வேண்டுமல்லவா? ஆனால், இன்றைக்குத் தமிழ் விழாக்கள் நடத்துவோரில் மிகப் பெரும்பான்மையர், பெயர்களில் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; தலைப்பெழுத்துகளில் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர்; நிகழ்விடம், பணியிடம், முகவரிகள் முதலானவற்றைக்…