‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம்

 ‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம் மாசி 29, 2048 / 13.03.2017க்குள் உங்கள் படைப்புகள் வந்து சேரட்டும்!   செந்தமிழர் சீர்மரபில் வந்தசொல் வணக்கம்! எந்தவொரு அறிமுகமும் தருமின்பச்சொல் வணக்கம்! அன்றுதொட்டு அகம்குளிர மலரும்சொல் வணக்கம்! மங்கலமாய் அமைந்தவொரு அன்புச்சொல் வணக்கம்! வேறுபாடுகள் சிறிதுமின்றி விளையும்சொல் வணக்கம்! வேற்றுமையிலும் ஒற்றுமையை ஊன்றும்சொல் வணக்கம்! தானென்ற அகந்தையை அகற்றும்சொல் வணக்கம்! தன்னைப்போல் பிறரையெண்ணும் சொல் வணக்கம்! வாழும் உயிர் அத்தனையும் வரவேற்கும் வணக்கம்! ஏழையென்றும் செல்வரென்றும் பார்க்காது வணக்கம்! படைத்தவனின் கருணையெண்ணி பணிவுடனே வணக்கம்!…

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண்

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண் உங்கள் படைப்புகள் வந்துசேர வேண்டிய நாள் மாசி 29, 2048 /  13.03.2017   புதிதாய்க் குதித்தவளா புதுமைப் பெண் அத்துனைப் பெண்ணின் ஆழ்மனதிலும் அங்கம் கொண்டதே புதுமை -அறிவாய் கல்வியில் ஓங்கவும் கவலைகள் நீங்கவும் கவிதையாய் வாழவும், காட்டாறாய் மாறவும் அவள் கைதேர்ந்த பதுமை- புரிவாய் எத்திசை நோக்கியும் எடுத்தடி வைப்பாள் முக்திக்கு மூர்க்கமாய் முனிவரைத் தேடாள் சக்தியாய் உலகாளும் பெண்ணினை அறிவாய் தெளிந்தே கற்பாள் தலை நிமிர்ந்தே நடப்பாள் தயை கொள்வாள்…

‘முயற்சி’ குறித்த படைப்புகளைத் தமிழ்த்தேர் வரவேற்கிறது!

தமிழ்த்தேரின் அடுத்தத் தலைப்பு:       உங்கள் படைப்புகள் கார்த்திகை 23, 2046  / 09.12.2015க்குள் வரவேற்கப்படுகின்றன. முழுதாய் எண்ணம் வெற்றிபெறவே முதலாய் வேண்டும் முயற்சி! பழுதாய் எண்ணம் மாறிவிடாமல் பாதுகாப்பதும் இங்கே முயற்சி! ஒருமுகச் சிந்தனை உள்ளொளியெல்லாம் திருவினையாக்கும் முயற்சி! அறவழிப் பயணம் ஆக்கத்தை ஈட்டும் அடிப்படை அங்கே முயற்சி! வெற்றியின்படிகள் விலாசங்களெல்லாம் செப்பும் பெயரே முயற்சி! பூமலர் காய்கனி யாவுமே இங்குகாண் வேர்களின் இடைவிடா முயற்சி! தடைகளைத் தகர்த்திடும் நெஞ்சுரம்கொண்டிடின் வெற்றியை ஈட்டிடும் முயற்சி! தகத்தகதகவென வாகைசூடியே தரணியில் வலம்வரும்…

வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் சார்பிலான முப்பெரு விழாக்கள்

    துபாயில் வானலை வளர்தமிழ், தமிழ்த்தேர் ஆகியன சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டும்.. கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கமும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிருவாகம்=வெற்றி நூல் வெளியீடும் துபாய் கராமா சிவஃச்டார் பவனில் தை 17, 2046 / 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு நடைபெற்றது.   செல்வி ஆனிசாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கவிஞர் சியாவுத்தீன் இயக்குநர் சிகரம் அமரர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கும் கவிஞர் அதிரை கலாம் கல்வியாளர், தொழிலதிபர் துபாய் ஈடிஏ அசுகான் ஃச்டார் குழும நிறுவனர் அமரர்…