தமிழுக்கு நீசெயுந் தொண்டு — நின் பகைமீது பாய்ச்சிய குண்டு (தமிழுக்கு) தமிழில்நீ புலமைபெற வேண்டும் — அது தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும் தமிழிலே யேபேச வேண்டும் — அது தனித்தமிழ் வளர்ச்சியைச் தூண்டும் (தமிழுக்கு) தமிழ் பேசு: தமிழிலே பாடு — நீ தமிழினிற் பாடியே ஆடு தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு — தமிழ் தப்பினால் உன்காதை மூடு (தமிழுக்கு) வணிக விளம்பரப் பலகை — அதில் வண்தமிழ் இலாவிடில் கைவை காண்கநீ திருமண அழைப் பைப் — பிற கலந்திருந் தால்அதைப்…