தோழர் தியாகு எழுதுகிறார் : திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்
(தோழர் தியாகு எழுதுகிறார் : பா.ச.க. போன்ற மதவாத இயக்கங்கள்-தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (3)(இ) திராவிடம் – தமிழீழம் – தமிழ்த் தேசியம்: தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன் திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது? கோரிக்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் பெரியார் திராவிடர் கழகத்தோடு எங்களுக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஈழப் போராட்டம், தமிழ்த்தேசிய கோரிக்கைகள் போன்றவற்றில் அவர்கள் எங்களோடு உடன்படுகிறார்கள். 65இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்தது போன்ற பெரியாரின்…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙி] தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] இதழாயுதம் ஏந்திய போராளி போராளிப் பணி ஒரு துறையுடன் முடிவடைவதில்லை. போராளிக்கு ஓய்வேது? ஒழிவேது? பேராசிரியரும் கல்விநிலையம் சார்ந்த பணியுடன் நின்று விடவில்லை. இதழ்ப்பணி மூலமாகத் தம் தொண்டினைத் தமிழ் உலகம் முழுவதும் விரிவு படுத்தினார். தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொண்டே தமிழைச் சிதைக்கும் பல அமைப்புகள்போன்ற ஒரு குழு (வட்டத்தொட்டி) நடத்திய கூட்டத்தில் ‘சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்’என்று முழங்கினர். இதை அறிந்த பேராசிரியர் இலக்குவனார், தமிழ்…