தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 5: இலக்குவனார் திருவள்ளுவன்
5 சங்கப் புலவர்கள் வழியில் மட்டுமல்லாமல் சமயக் குரவர்கள் வழியிலும் பாடல்களை இயற்றியுள்ளார் பேராசிரியர் இலக்குவனார் அவர்கள். மாணிக்க வாசகர் இயற்றிய ‘போற்றித் திருவகவல்’ சிவபெருமான் குறித்தது. இதே போல் தமிழ்க்கடல் மறைமலையடிகளை நாடு போற்ற வேண்டும் எனக் கருதிய பேராசிரியர் பின்வருமாறு பாடியுள்ளார். “தனித்தமிழ் இயக்கம் தோற்றுவித்த தலைவனே போற்றி! தமிழ் காக்கும் மறவர்களின் எண்ணத்தில் நிறைந்திருப்பவரே போற்றி! இந்தி மொழி என்னும் இருட்படலத்தை விலக்கிய செங்கதிர் ஒளியே போற்றி! தமிழ்நலம் நாடுவார்…