தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – சுப.உதயகுமாரன்
காவல்துறை அரசா? சுப.உதயகுமாரன் எச்சரிக்கை மணி தோழர் தியாகு எழுதியமைக்கான கருத்தூட்டக் கட்டுரை தமிழகக் காவல்துறைக்குள் ஒரு காவித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குமரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரைக் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, “உங்களுக்கு அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும், அப்படித்தானே?” என்று என்னிடம் கேட்டார். இந்த தவறான, தேவையற்ற, முறையற்ற கேள்வி என்னோடிருந்த தோழர்களையும், என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்போது “கலவரம் நடந்தே தீரும்” என்று பொதுவெளியில் கூச்சமின்றிப் பொறுப்பின்றிப் பேசுகிறவர்கள் அரசியல் செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அப்படி ஒரு…