தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மே 16, 2016 – சச்சிதானந்தன் தெய்வசிகாமணி
தமிழகச் சட்டமன்றத் தேர்தல், மே 16, 2016 நல்ல உள்ளங்கள் நலிந்து வேகுதே, நாதி இல்லாமல் தெருவில் சாகுதே, நீதி கேளிக்கைப் பொருளென்றாகுதே, நிலைமை கைமீறி நேர்மை வழிமாறி, நாளும் தீநாற்றம் அதிகமாகுதே! நெஞ்சம் வெம்மித்தமிழ் நிலத்தைக் காத்திட, நின்று நல்லுயிரைக் கொடுத்துப் போராடி, நாடு சுடுகாடு ஆகும்முன் காக்க, தமிழர் நாம் துணிந்து ஒன்று கூடுவோம்! நல்ல தமிழன் ஒருவனை ஆட்சிப் பீடத்தில், நீங்கள் ஏற்றி வைத்துப் பாருங்கள்! நீங்கும் தமிழ் மண்ணின் சாவங்கள்! நிலைத்த நல்லாட்சி பெற்று நல்லதொரு, நிலைக்கு உயரலாம்…