பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள் 1031) மத்திய அரசு பொங்கல் விடுமுறையை நீக்கியது என்று கட்சித்தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் தமிழக முதல்வரும் பொங்கி எழுந்தனர். பொதுவாக எதற்காவது ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்தினால், எதையாவது குறிப்பிட்டு அதற்குப் போராடாதவர்கள் இதற்குமட்டும் போராடுவது ஏன் என்பர். அவ்வாறில்லாமல், பொங்கல் விடுமுறைக்காகப் பொங்கியோர் போகி விடுமுறை வேண்டியும் பொங்க வேண்டுகிறோம். முன்பு, போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என…