(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 16/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க் கிளர்ச்சி: 17/17   உயர்வுபெற வேண்டுமெனின் ஒவ்வொரு குலத்தினரும்அயர்வின்றிப் பலதுறைநூல் ஆயவேண்டும் அம்மானைஅயர்வின்றிப் பலதுறைநூல் அனைவரும் ஆராயின்உயர்ந்தோர்க்குத் தாழ்குலத்தோர் ஒடுங்குவரோ அம்மானைஉயர்வுதாழ்வு பேசினினி ஒறுப்புண்டாம் அம்மானை       (81) தமிழ்நாட்டெல்லை நன்கு வளம்பெற்ற நம்தமிழ் நாட்டெல்லைதென்குமரி முதலாகத் திருப்பதியாம் அம்மானைதென்குமரி முதலாகத் திருப்பதிநம் எல்லையெனில்இன்று சிலரதனை எதிர்ப்பதேன் அம்மானைஎதிர்ப்பவரை எதிர்த்தால்நம் இடம்பெறலாம் அம்மானை    (82) முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானைசென்னை தமிழருக்கே…