தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்! – கோ. நடராசன்

தமிழ் நிலத்தை நாமே ஆள்வோம்!   முந்து தமிழ் மொழி மறந்தான் முன்னோரின் வழி மறந்தான் மண்ணின் மரபிழந்தான் மான மென்றால் எதுவென்றான்-உயிராம் நீரின் உரிமை இழந்தான் மண்ணுரிமை பேணுதற்கு முன்னுரிமை தர மறந்தான் – வள்ளுவன் போதித்த பொன்னான கருத்திழந்தான் கடல் கடந்து வணிகம் செய்த கன்னல் நிகர் மொழி இனத்தான் – இன்று ஆதி புகழ் மறந்து அயலான் கால் நக்கி அடி பணிந்து அழிகின்றான் இந்து என்றும் இந்தியன் தானென்றும் திராவிடன் என்றும் தலித்திய னேயென்றும் தடம் மாறிப் போன…

செம்மொழிச் செந்த‌மிழே! நீ வாழி!

செம்மொழிச் செந்த‌மிழே! உலக மொழிகள் மூவாயிரம் அதனில் முதற்மொழியாகிய தமிழ்மொழியே! குமரிக்கண்டத்தில் பிறந்த‌ செம்மொழிச் செந்தமிழே! தமிழர்கள்தாம் உலகிற் தோன்றிய மாந்தர்கள் என்பதினை உலகினிற்கறிய வைத்த செம்மொழியே! உலகமொழிகளில் இயன்மொழிக்கென்று பதினாறு பண்புகளைக் கொண்டிருக்கும் செம்மொழிச் செந்தமிழே! திராவிட மொழிகட்கெல்லாம் தாய்மொழியாம் தமிழ்மொழியே! இயல், இசை, நாடகத் தமிழெனும் இலக்கிய முத்தமிழே! ஆரிய மொழிகளின் ஆதிக்கத்திலிருந்து சீரழியாது வந்த பைந்தமிழே! உனக்குப்பின் தோன்றிய மொழிகளெல்லாம் அழிந்துவரும் நிலையில் நீ மட்டும் உலகளவில் வளர்ந்துவரும் செந்தமிழே! முச்சங்கங்கள் வைத்து வளர்க்கப்பட்ட‌ தாய் மொழியாம் தமிழ் மொழியே!…

தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது! – இலக்குவனார்திருவள்ளுவன்

தமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடமே உள்ளது!     எங்கெங்கு காணினும் தமிழ்க் கொலை என்பதே இன்றைய ஊடகங்களின் நிலைப்பாடாக உள்ளது. தமிழ் அழியாமல் காக்கப்படவும் தமிழர்நலன் பேணப்படவும் உலெகங்கும் தமிழர்கள் உரிமையுடன் வாழ்ந்திடவும் ஊடகத்துறையினர் முயன்றால்மட்டுமே இயலும்.   நல்லதமிழில் பேசுநரும் எழுதுநரும் இருப்பினும் நற்றமிழ்ப் படைப்புகளை வெளியிடும் இலக்கிய இதழ்கள் வரினும் நற்றமிழ் பரவுவதற்குப் பெரும்பாலான ஊடகங்கள் துணை நிற்பதில்லை. துணை நிற்காததுடன் தமிழ்க் கொலைகளை அரங்கேற்றுவைதயே முழுநேரச் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. எனவேதான் தமிழறிஞர்களின் அரும்பணிகளும் தமிழன்பர்களின் தடையிலா முயற்சிகளும் விழலுக்கு…