புதுச்சேரி – தனித்தமிழ்க் கழகத்தின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஒளிப்படங்கள்

  .ஆ. 2047   மாசி – கும்பம் 3  -15.02.2016 புதுச்சேரி தனித்தமிழ்க் கழகம் நடத்திய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா! தலைமை :பெ.தமிழ்நாவன் வரவேற்புரை: சீனு.அரிமாப்பாண்டியன் கருத்துரை: சி.தமிழ்மாறன், சி.வெற்றிவேந்தன், முத்து.சேரன், புதுவைத் தமிழ்நெஞ்சன் சிறப்புரை: முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் நன்றியுரை: கு.அ.தமிழ்மொழி   [ படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம். ]

செல்வி தமிழ் மொழி செந்தமிழ் போல் வாழ்கவே! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

புதுவைக் கவிஞர் தமிழ்நெஞ்சன், தன் மகள் செல்வி தமிழ்மொழியின் பிறந்த நாளில் அவரை வாழ்த்திய பாடல்கள் இரண்டு. என்றன் பிள்ளை என்னுயிர் தமிழ்மொழி எல்லா புகழும் பெற்றிடுவாள் – நாம் முன்னம் வாழ்ந்த முத்தமிழ்க் குடியின் மூச்சாய் இருந்து காத்திடுவாள் அறிவில் அன்பில் ஆற்றலில் எல்லாம் அவளே முதலிடம் பிடித்திடுவாள் – குறள் நெறியில் நின்று நீள்வினை ஆற்றிட நெருப்பாய் நின்று வெடித்திடுவாள் வாழ்க்கை எதுவென வள்ளுவம் சொன்ன வழியில் தானே சென்றிடுவாள் – நம்மை சூழ்ந்த கேட்டைச் சுட்டெ ரிக்கும் சுடர்மதி ஆகி…

தோழர்ஆனைமுத்து – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தோழமையோடு பழகுகின்ற தோழர்ஆனைமுத்து  -புதுவைத் தமிழ்நெஞ்சன் பகுத்தறிவுப் பெட்டகம் சிந்தனைக் கருவூலம் தோழர் ஆனைமுத்து மாந்தநேயத் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம் ஓய்வறியா அவருழைப்பை சொல்லும் இந்த ஞாலம் அறிவே துணையெனச் சொல்லுவார் மடமையை பகுத்தறிவுத் தீயில் தள்ளுவார் ஆரியத்தை வீழ்த்தி வெல்லுவார் அறியாமையைக் கொய்வார் ஆரியத்தை வைவார் இனமான ஆடையினை நெய்வார் அறிவு மழையை அகத்தினிலே பொழிவார் குரலில் இடி..! போடுவது பொடி..! ஆனைமுத்தைப் படி..!

புதுச்சேரி, மாணவர் பொதுநலத் தொண்டியக்கம்

67 ஆவது திங்கள் பாவரங்கம் திருக்குறள் பெருமாள் ஐயா நூற்றாண்டு தொடக்க விழா 15-11-1914 – 15-11-2014 ஆகியன 30.12.2013  அன்று நடைபெற்றன. நிகழ்ச்சியில் மரபுப் பா, கழக இலக்கிய அறிமுகம், புதுப் பா, மொழிபெயர்ப்புப் பா , துளிப்பா, சிறார் பாவரங்கம் நடைபெற்றன.  – புதுவைத் தமிழ்நெஞ்சன்