குறள் கடலில் சில துளிகள் 29. – பெரியாரைப் பேணுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 28 – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், குறள் எண் ௪௱௪௰௩ – 443) பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க. பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம்…
ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! – பெரியார்
ஆரியநெறிகளின் மாறுபாடுகளைக் காட்டவே திருக்குறள் உண்டாக்கப்பட்டது! ஆரியக்கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவையாவும் பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவற்றிற்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும். –தந்தை பெரியார் ஈ. வே. இராமசாமி
திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்
திறனாய்வு நெறியில் சிறந்த பேராசிரியர்கள் பேராசிரியர்கள் உரை விளக்கம் சிறந்த இலக்கியத் திறனாய்வு நெறிகளைக் கொண்டுள்ளது. முற்காலத்து இலக்கியக் கொள்கைகளையும் திறனாய்வு முறைகளையும் அறிந்து கொள்ள இவர் உரை பயன்படுகின்றது. கவிதைக் கலையைப் பற்றி வரன்முறையாகவும் நுட்பமாகவும் சிறந்த மேற்கோள்தந்து ஆராய்ச்சித் திறனோடு இவர் விளக்குகின்றார். இலக்கியக் கலைமாட்சி, இலக்கியக் கொள்கை இலக்கியத் திறனாய்வு வகை ஆகியவற்றைத் தனித்தனியே பெயர் கூறி இவர் விளக்கவில்லை என்றாலும், இவரது உரையில் அவரை பற்றிய அடிப்படையான உண்மைகளைக் காண முடிகின்றது. இலக்கிய ஒப்பியல் ஆய்வும் இவரிடம் உண்டு….