தமிழ்படித்தால்  பூரித்தே  வாழ்ந்திடுவேன்! ஆங்கிலந்தான்  அறிவுமொழி  ஆங்கி  லத்தில் அருங்கல்வி  கற்றால்தான்  ஏற்றம்  என்றே தீங்கான  எண்ணத்தில்  தமிழர்  நாமோ திசைமாறிச்  செல்கின்றோம்  வழியை  விட்டே மாங்குயிலைத்  தன்குஞ்சாய்  வளர்க்கும்  காக்கை மடத்தனம்போல்   குழந்தைகளைப்  பயிற்று  கின்றோம் தாங்குகின்ற  வேர்தன்னை  மறந்து  மேலே தரைதெரியும்  மரந்தன்னை  புகழு  கின்றோம் ! ஆங்கிலத்தைப்  படித்தால்நீ  பெருமை  யோடே அரும்வாழ்வு  வாழ்ந்திடலாம்  பூலோ  கத்தில் பாங்கான  சமற்கிருதம்  படித்தால்  நீயும் பான்மையுடன்  வாழ்ந்திடலாம்  மேலோ  கத்தில் ஏங்குகின்ற  படியிந்த  இரண்டு  மின்றி ஏலாத  தமிழ்படிக்கப்  போவ  தாக…