தமிழ்ப்புறக்கணிப்பைத் தவிர்ப்போம்! இந்தியத் திருநாட்டின் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. என்றாலும் நமக்குரிய உரிமைகளை இழந்துதான் நாம் வாழ்கிறோம். இந்தியர் என்ற அடையாளம் தமிழர் என்ற அடையாளத்தைக் காக்கத்தான் இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கு இருக்கக் கூடாது. ஆனால், எல்லா நிலைகளிலும் எல்லா இடங்களிலும் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து வாழும் வகையி்ல்தான் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. தமிழ் மாநிலம் அமைக்கப்பட்ட பொழுதே நில உரிமைகளை இழந்துதானே ஏற்றுக் கொண்டோம். அதன் தொடர்ச்சியாக நாம் உரிமைகளை இழப்பதும் தொடர் வரலாறாகத்தானே உள்ளது. உரிமைகளைக்…