கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18 பதினேழாம் பாசுரம் தமிழர் வீரக் குலத்தவர் தாழாது வாழ்ந்த தமிழ்க்குடி மாண்மறத்தால் வீழாத கூர்வேல், வாள் வெங்களத்து ஊடார்த்து வேழம், பரி, பகைவர் வீழ்த்திப் பொருதுயர்ந்தார்; ஏழை எனினுமொரு கோழையல்லா ஆண்குலத்தார், வாழாக் குழவியினை வாள்கீறி மண்புதைத்தார் ; ஆழி கடந்துநிலம் ஆணை செல,வென்றார்; பாழாய் உறங்குதியே! பாரோர்க் கிவையுணர்த்தக் கீழ்வான் சிவக்குமுனம் கீர்த்திசொல் எம்பாவாய்! பதினெட்டாம் பாசுரம் நெஞ்சம் அஞ்சாத…