நக்கீரனுக்கு நன்றி!
நக்கீரனுக்கு நன்றி! அரசியல் செய்திகளுடன் தமிழுணர்வு செய்திகளையும் வெளியிடும் இதழ்களில் நக்கீரனும் ஒன்று. தமிழ்க்காப்புக்கழகம், தென்னிந்திய நடிகர்சங்கத்தின் மட்டையாட்டத்திற்கான அணிகளின் பெயர்களைத் தமிழில் சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனைப் பாரறியும் வண்ணம் தொகுதி 28, எய் 109 நாள் சித்திரை 3- 5/ ஏப்.16-18 இதழில்வெளியிட்டுள்ளது நக்கீரன். அதற்கு நாம் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் மட்டையாட்ட அணிகளின் பெயர்களுக்கு எதிர்ப்பு! பொருட்படுத்தாத நடிகர் சங்கம்! (வந்த செய்தி) உறுதிப்படுத்தப்பட்ட உண்மை: நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டடம் கட்டுவதற்கு 26 கோடி…
சமக்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை
திராவிட மக்கள் பொருள்களுக்கும், கலைகளுக்கும் இட்டு வழங்கிய பெயர்கள் எல்லாம் தமிழ். அவை பிற மொழிச் சொற்களல்ல. ஆராய்ச்சியில் சமக்கிருத மொழியில் காணப்படும் கலைச் சொற்கள் தமிழினின்றும் இரவல் வாங்கப்பட்டவை என்று புலப்படுதல் கூடும். ந.சி. கந்தையா (பிள்ளை) : தமிழ் இந்தியா: பக்கம் – 39
இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர் காக்க அறநிலையத்துறைக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அறநிலையத்துறையில் தமிழறம் தழைக்கட்டும்! எந்த நாட்டிலும் இல்லாக் கொடுமைகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவற்றில் ஒன்றுதான், தமிழ் மக்களால், தமிழ்மக்களின் செல்வத்தில், தமிழ் மக்கள் உழைப்பில், தமிழ் மக்களுக்காகக் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் வழிபாடும் துரததப்பட்டு விட்டது; இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டுவிட்டன. தமிழ்வழிபாடு குறித்துத் தனியே பின்னர் எழுதுவோம். இப்பொழுது தமிழ்ப்பெயர்கள் குறித்துக் கூற விரும்புகிறோம். மலைவளர் காதலி, மங்களேசுவரர் – மங்களேசுவரி, மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர் -, மங்களாம்பிகை, திருமேனி நாதர் – துணைமாலை அம்மை, நெல்வேலிநாதர் – வடிவுடையம்மை, குற்றாலநாதர்,…
தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது! தமிழை இறைமொழி என்கின்றனர். ஆனால் இறைமொழியில் இறைவனைத் தமிழில்வணங்க வகையில்லை. இறைவனின் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டும் சிதைக்கப்பட்டும் ஆரியப் பெயர்களாகத் திகழ்கின்றன. இறைவனின் திருப்பெயர்களைத் தமிழில் குறிப்பிடாமல் தமிழில் வழிபடாமல் இருப்பவர்க்கு இறையருள் எங்ஙனம் கிட்டும்? கோவில் தொடர்பான துண்டறிக்கை கிடைத்தால் கோவிலில் ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்க இருப்பதும் அதற்கு நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றும்தான் நமக்குப் புரியும். கிரந்த எழுத்துகளில் ஆரியமே அங்கே கோலோச்சும்! கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு நம் செல்வம்தான் தேவை!…
ரோசா தமிழ்ப்பெயரா? – தமிழக அரசியல்
சூன் 5-ஆம் நாள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த நான்கு சிறுமிகளுக்கு, கலைஞர் தமிழ்ப்பெயர் சூட்டினார் என்று முரசொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு சிறுமிகளுக்கும் ரோசா(ரோஜா), மல்லி, அல்லி, முல்லை, என்று பெயர் சூட்டினாராம் கலைஞர். இந்நிலையில் ரோசா என்பது தமிழ்ப்பெயரா என்று சருச்சையை க் கிளப்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரான திருவள்ளுவன் இலக்குவனார். “தமிழில் ‘ரோ’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லே கிடையாது. ரோசா(ஜா) என்பது தமிழ்ப்பெயர் அல்ல. ரோசாப்பூவும் தமிழ்நிலத்தைச் சேர்ந்தது அல்ல. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 பூக்களின்…