தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) …….. (இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு: ) இக் கொடுஞ்சிறை வாழ்வைப் பெற்றது ஏன்? இந்தி மொழி மட்டும் முதன்மை பெற்றால் ஏனைய மொழிகள் அழிந்தொழியும் என்றும் தமிழர்கள் தமிழ் மொழி வழியாகப் படித்தலே தக்கது என்றும் உரைத்ததும் இக் கொள்கைகளைப் பரப்ப ஒல்லும் வகையால் முயன்றதுமேதான் இச்சிறை வாழ்வை எனக்கு அளித் தன. யான் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த்தா இன்னும் விடுதலை பெற்றிலள். ஒரு…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்: “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்டேன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) பேராசிரியரைக் கைது செய்யத்திட்டமிட்டுள்ளதை அறிந்த புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அதனைப் பேராசிரியரிடம் தெரிவித்தார். சிறைசெல்லும் புலவர்சிலர் வேண்டும் இன்று செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும் முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டும் இன்று குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க் குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும் நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள் நிற்குமுதற் புலவன்நான் ஆகவேண்டும் (எழுத்தாளர் மன்றக் கவியரங்கில் முடியரசன் குறள்நெறி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தமிழ்நாட்டில் தமிழே எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தமிழ்வழிக்கல்வியே தேவை; அதைப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் அரசு தமிழ் வழிக் கல்வியையே நடைமுறைப்படுத்தவும் தமிழ்உரிமைப் பெருநடைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றை அறிவித்தார். தமிழ் உரிமைப்பெருநடை அணி குறிக்கோள்கள் கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்குகின்ற அரசின் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசை வேண்டுதல். மாணவர்கட்கும் பெற்றோர்க்கும் தமிழ் வழியாகப்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தமிழியக்கச் செய்திகளைப் பொதுவான இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. ஆனால், தி.மு.க. அன்பர்கள் நடத்தும் இலக்கிய இதழ்கள் மூலம் அவைபற்றி அறிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்திய ஆங்கில இதழ் போக்கியது. வட மாநிலங்களிலும் படைத்துறையினரிடமும் இவ்விதழுக்கு நல்ல வரவேற்பிருந்தது. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்னும் திருக்குறள் மூலம் தெய்வப்புலவர் திருவள்ளுவர்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) இந்தச் சூழலில் பேராசிரியர் இலக்குவனாருக்கு நாகர்கோயிலில் உள்ள தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பணி கிடைத்ததால் அங்கே சென்று தம் தொண்டுகளைத் தொடர்ந்தார். முதலில் தமிழ் முதுகலை தொடங்குவதற்குரிய ஏற்பிசைவைப் பெற்றுத் தொடங்கச் செய்தார். முதல்வராக இருந்த முனைவர் பா.நடராசன் மத்திய அரசின் பொருளியல் வல்லுநராகச் சென்றமையால் முதல்வர் பணியிடம் ஒழிவிடமாயிற்று. மூத்த பேராசிரியரான பேராசிரியர் இலக்குவனாருக்கு வரவேண்டிய முதல்வர் பதவியை வேறு சாதியினர் என்பதால் வழங்க மனமின்றி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி) அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு): “மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும் ஊக்கத்திற்கும் ஆக்கம் தரும் வகையில் பாடம் பயிற்றிய நல்லாசிரியர். எத்தனை ஐயக் கேள்விகட்கும் விடை தருவார். மாணவர் நலங்கருதும் மாண்பினர்; ஆசிரியர்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி இந்நூலைத் தொடர்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், மொழியியல் குறித்த தமிழ், ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பேராசிரியர் சி.இலக்குவனார் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலிலும் பேராசிரியரைப் புரட்சிப் போராளியாக அடையாளப்படுத்தும் கருத்துகளைக் காணலாம். “அழுக்கு படிந்த ஒன்றினைத் துடைத்துத் தூய்மையாக்கினால் புதிய ஒன்றாகப் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுதான் அதன் உண்மைத் தோற்றம் எனினும் அழுக்கையே பார்த்துப் பழகியவர்களுக்கு இது…
புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் – நா.காமராசன்
புரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார். கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர்…