அடிமைப்படக் காரணம் அரசர்களே!
நம் நாடு அடிமைப்படக் காரணம் நம் அரசர்களே! – தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர் “நம் நாட்டை ஐரோப்பியர்களுக்கு அடிமைப்படுத்தியவர்கள் நம் அரசர்கள்தாம்” என்றார் தமிழ்நாடு அரசு அருங்காட்சியக மேனாள் துணை இயக்குநர் செ.இராசா முகமது அவர்கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற விசயநகரக் காலம் முதல் குடியேற்றஆதிக்கக்(காலனியாதிக்க) காலம் வரையிலான கடல்சார் வரலாறு என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் அவர் மேலும் பேசியது: “தமிழ்நாட்டில் விசயநகரப் பேரரசின் ஆட்சிக் காலம்…