பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!   கம்பி வேலிகளின் பின்னால், சுவர்களின் பின்னால், இருட்டறைகளில் தமிழ்ப் பெண்களை அடைத்து வைத்துப் பாலியல் முகாம்களை நடத்தும் சிங்களப் படைகள் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சிங்களப் படைகள் முள்ளிவாய்க்காலில் நூற்று ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இன அழிப்பு நிகழ்வு நடந்து எட்டு ஆண்டுகள் கழிந்த…