பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கைத் தமிழ்வழியில் நடத்துக! – பெ.மணியரசன்
தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்! – இளைய விகடன்
பிற கருவூலம் – இளைய விகடன் (சூனியர் விகடன்) தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்! துரை.வேம்பையன் இராசமுருகன் ‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள். கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்த ஊர் மக்கள், கோயில் குடமுழுக்கு,…