ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும்- இலக்குவனார் திருவள்ளுவன்
ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஒளவை அருள் நடராசன் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணி அமர்த்தப்பட்டுப் பணிப் பொறுப்பேற்றுள்ளார். இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்.(திருவள்ளுவர், திருக்குறள் 517) என்பதற்கிணங்க முதல்வர் தக்கவர்களைத் தக்கப்பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார். அவர் பணிப்பொறுப்பேற்றதுமே அவரது நியமனங்கள் இதை மெய்ப்பித்தன. அவற்றின் தொடர்ச்சியாக இந்நியமனமும் அதனை உணர்த்துகிறது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் பதவிக்குப் பொருத்தமானவராக ஒளவை ந. அருள் திகழ்கிறார். சில…