தலைமைச் செயலகத்தினரே, தமிழ்ச் செயலகமாகச் செயற்படுவீர்! | இலக்குவனார் திருவள்ளுவன்| விசவனூர் வே.தளபதி|
முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 9. தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை.) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம்: 10. முதல்வர் சாட்டையை எடுக்க வேண்டும்! தமிழுக்குச் செய்ய வேண்டியவற்றை அரசு மட்டும் செய்தால் போதும் என மக்கள் வாளாவிருந்துவிடுகின்றனர். அரசுத் துறைகளோ தமிழ் வளர்ச்சித்துறையோ மட்டும் தமிழ் வளர்த்தால் போதும் என நாம் எண்ணுவது தவறாகும். மக்கள் குடும்பத்தில், வணிகத்தில், கல்வியில், அச்சகங்களில், அழைப்பிதழ்களில், மண்டபங்களில், கதைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், திருமணங்களில், பிறந்தநாள் விழாக்களில், பிற விழாக்களில்,…