புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம்
புதுச்சேரி ஆளுநர் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை மதிக்க வேண்டும் – தனித்தமிழ் இயக்கம் ஆண்டுதோறும் சிலப்பதிகாரவிழாவைப் புதுச்சேரியில் தனித்தமிழ் இயக்கம் நடத்திவருகிறது. இவ்வாண்டு ஆனி 16, 2047 / சூன் 30, 2016 இல் புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகார விழா நடைபெற்றது. தனித்தமிழ்இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் முனைவர் கனகராசு வரவேற்புரை நிகழ்த்தினார். சிலப்பதிகாரம் பற்றிய பா வரங்கில் மு.பாலசுப்பிரமணியன், இரா.தேவதாசு, ஆறு.செல்வன், சண்முகசுந்தரம், இரா. இள முருகன், நட.இராமமூர்த்தி ஆகிய பாவலர்கள் கலந்து கொண்டனர். புரவலர் கி.கலியபெருமாள் செயல்அறிக்கை படித்தார்….