இளைஞர் கைகளில் இணையத்தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்
இளைஞர் கைகளில் இணையத்தமிழ் தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அனைவரும் எதிரொலிக்கும் கவலை முதியோர் அவையாக இருக்கிறதே என்பதுதான். எந்தத் தமிழ்க்கூட்டம் என்றாலும், இளைஞர்களைக் காண முடிவதில்லை. ஒருவேளை உரையாளர்களின் குடும்பத்தினர் யாரும் வந்திருந்தாலும் அவர்கள் ஒருவர் அல்லது இருவராகத்தான் இருப்பர். கூட்டம் இறுதிவரை இருப்பார்கள் என்பதும் ஐயமே. இதற்காகவே நான் கல்லூரிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினேன். அங்கும் தமிழ் பயிலும் ஏதோ ஓர் ஆண்டின் மாணாக்கர்கள் மட்டும் அமர்ந்திருப்பார்கள். வருபவர்கள் ஆர்வமாகத்தான் இருப்பர். ஆனால், கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு இத்தனாம் ஆண்டு…
வெள்ளிசை(Karoeke) முறையில் தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல் – புவனேசுவரி கணேசன்
வெள்ளிசை (Karoeke) தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் ஆய்வுச் சுருக்கம் இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இக்கூறுகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படும் இலக்கண விதிகளே மாணவர்களின் சிந்தையில் பதியும் என்பதே என் கருத்து. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் முறையோடு இதனை…